ஊரடங்கால் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட 114 இந்தியர்கள் நாடு திரும்பினர்

0 990

கொரோனா ஊரடங்கு போன்ற காரணத்தால் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள், 114 பேர் பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லை வழியே நாடு திரும்பினர்.

சுற்றுலா போன்ற காரணத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்த இந்தியர்கள், கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்காலும், சர்வதேச எல்லை மூடப்பட்டதாலும் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரகத்தின்மூலம் நாடு திரும்ப விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து 114 பேரும் அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்ப மத்திய அரசு அனுமதியளித்தது.

இதனால் 114 பேரும் அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பினர். அந்த 114 பேரில் 34 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த மாநிலத்திலும், எஞ்சியோர் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரிலும் தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments