இரட்டைக் கொலை வழக்கு காவலர்களிடம் மீண்டும் விசாரணை

0 1947

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் ரேவதி உள்பட 6 காவலர்கள் மற்றும் பெனிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. 

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஸ்ரீதர் உள்பட 5 பேர் ஏற்கனவே மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் 3 காவலர்களும் அங்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உடல் நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரையும் மதுரை மத்திய சிறைச் சாலையிலுள்ள மருத்துவமனைக்கு மாற்ற உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியான காவலர் ரேவதியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் 5 பேரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. உயிரிழந்த பெனிக்சின் நண்பர்கள் 5 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் எழுத்து மூலம் வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கும் வரை தங்களுடைய விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்தார். gfx out

இதனிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச் சிறையில், கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு கொண்டு வரப்பட்ட போது ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள், மருத்துவ சான்று உள்ளிட்டவற்றை நீதிபதி ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments