நூறாண்டுக்கு முன் ஏற்பட்ட பெருந்தொற்றில் இந்தியாவில் அதிக உயிரிழப்பு - பிரதமர் மோடி

0 6165

நூறாண்டுகளுக்கு முன் உலகில் பெருந்தொற்று ஏற்பட்டபோது இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், இப்போது மிகக் குறைந்த அளவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பிரநிதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், அச்சம் மிகுந்த சூழலில் தன்னார்வமாகப் பணியாற்ற வருவது சேவையின் புதிய வடிவமாகும் எனத் தெரிவித்தார்.

நூறாண்டுக்கு முன் இதேபோலப் பெருந்தொற்று ஏற்பட்டபோது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனப் பலரும் அஞ்சியதாகவும், மக்களின் ஒத்துழைப்புடன் இந்த அச்சத்தை வென்றுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தைப் போல் மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் கொரோனாவால் 65 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 800 பேர் தான் உயிரிழந்ததாகவும், ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டுள்ளதையே இது காட்டுவதாகவும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments