கேமரூன் சிறைச்சாலையில் கடந்த 3 மாதங்களில் 31 கைதிகள் உயிரிழப்பு

0 1592

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள யாவுண்டே மத்திய சிறைச்சாலையில், கடந்த 3 மாதங்களில் 31 பேர் பலியான போதும், உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சத்தால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுப்பதாக தெரிவிக்கும் அவர்கள், 324 கைதிகள் தங்க வைக்கப்பட வேண்டிய சிறைச்சாலையில் 2000 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

42 ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில், இட வசதி இன்றி ஏராளமானோர் ஒரே அறையில் தங்க வைக்கப்படுவதால் அங்கு கொரோனா தொற்று விரைவாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments