கேரளா உயர்நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் மனு

0 4703

கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 15 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் பிடிபட்ட வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ளார்.

ஸ்வப்னா சார்பில் அவருடைய வழக்கறிஞர் ராஜேஷ் குமார் புதன்கிழமை இரவு ஆன்லைன் மூலம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், தங்க கடத்தலுக்கும் ஸ்வப்னா சுரேஸுக்கும் தொடர்பு கிடையாது எனவும், ஐக்கிய அரபு அமீரக துணை தூதரத்தில் தற்போது பொறுப்பாளராக இருக்கும் ரசித் காமிஸ் அல் சைமிலி (Rashid Khamis Al Sheimeili)தான், பார்சல் தாமதமாகி வருவது குறித்து தெரிவித்து ஸ்வப்னாவை சரிபார்க்கும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் இன்னொரு மனுவும் தாக்கல் செய்யப்ப்டடுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments