திருப்பதி கோவிலில் ஊழியர்கள், போலீசார் உள்ளிட்ட 80 பேருக்கு கொரோனா

0 3128

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்கள், போலீசார் உள்ளிட்ட 80 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா, ஏ.பி.எஸ்.பி. பட்டாலியன் பிரிவை சேர்ந்த போலீசாருக்கு அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

தினமும் ஊழியர்களில் 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுவரை 80 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் கூறினார்.

பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதுவரை ஒருவருக்குக் கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்ற அவர், பக்தர்கள் மூலமாகவோ பணிபுரியும் இடத்திலோ தொற்று பரவவில்லை என்றும் பணி முடிந்த பிறகு ஒரே இடத்தில் பலர் அமர்ந்து பேசும் போது தொற்று பரவியிருக்கலாம் என கருதப்படுவதாகவும் தெரிவித்தார். இதனிடையே பரிசோதனைகளை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments