உலகளவில் பொருளாதார மீட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - பிரதமர் மோடி உரை

0 3420

மக்கள் நலனிலும் பொருளாதார நலனிலும் அரசு ஒரே நேரத்தில் அக்கறை காட்டி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குளோபல் இந்தியா வீக் என்னும் தலைப்பில் காணொலியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, இந்தியா ஒருபுறம் மக்கள் நலனில் அக்கறையுடன் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடி வருவதாகவும், மறுபுறம் பொருளாதார நலனில் அக்கறை கொண்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மக்கள் நலனுக்கும், பொருளாதார நலனுக்கும் எடுத்துவரும் முயற்சிகள் ஒரே நேரத்தில் வெற்றி பெறுவதே பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டியதாகப் பொருளாகும் எனக் குறிப்பிட்டார்.

பொருளாதாரம் மீட்சி பெறுவதைக் கண்கூடாகக் காண முடிவதாகக் குறிப்பிட்டார். கடந்த ஆறாண்டுகளாக வீட்டுவசதி, உட்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் தொடங்குவதை எளிதாக்கல், வரிச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அரசு செய்துள்ளதாக மோடி குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments