தங்கம் விலை சவரனுக்கு மேலும் 208 ரூபாய் உயர்வு

0 1431

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 208 ரூபாய் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கம் விலை, கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் 37 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 528 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு மேலும் 208 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று 4,692 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று 26 ரூபாய் உயர்ந்து, 4,718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 37 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 208 ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 774 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. பார் வெள்ளி ஒரு கிலோ 1,100 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments