நடப்பாண்டிற்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து

0 1728

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர், கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இன்ஸ்டாகிராம் லைவில் பங்கேற்ற அவர், இதனை உறுதிப்படுத்தினார். இதனிடையே, நடப்பாண்டிற்கான ஆசியகோப்பையை நடத்தும் உரிமையை பெற்று இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனமும், கொரோனா அச்சுறுத்தலால் தொடரை கைவிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அக்டோபர் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள டீ20 உலகக்கோப்பையை, ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் கைவிடப்பட்டு இருப்பதன் மூலம், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அரங்கேறுவதில் இருந்த தடை நீங்கி உள்ளதாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments