சமுத்திர சேது திட்டம் நிறைவு -3992 இந்தியர்கள் நாடு திரும்பினர்

0 1723

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படையினர் தங்கள் பணிகளை நிறைவு செய்தனர். ஜலஸ்வா மற்றும் ஐராவத், ஷர்துல், மகர் ஆகிய கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

மூன்று நாடுகளில் இருந்து 3 ஆயிரத்து 992 பேர் அழைத்து தாய்நாட்டுக்கு வரப்பட்டுள்ளனர். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் கடந்த மே மாதம் 5ம்தேதி முதல் இந்தியர்களை கடல் மார்க்கமாக அழைத்து வரும் பணியை இந்திய கடற்படையினர் தொடங்கினர்.

இதில் மிகப்பெரிய சவாலாக இருந்தது கப்பலில் யாருக்கும் கொரோனா தொற்று பரவல் இல்லை என்பதை உறுதி செய்வதுதான். இதனிடையே கேசரி என்ற மற்றொரு சரக்கு கப்பல் மாலத்தீவு , மொரீஷஸ், செஷலிஸ் உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு 580 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments