அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞருக்கு மைதானத்தில் முழங்காலிட்டு அஞ்சலி செலுத்திய கிரிக்கெட் வீரர்கள்

0 3179

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டியின் முன்னதாக அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாயிட்டுக்கு கிரிக்கெட் வீரர்கள் முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினர். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.imageஇரு நாடுகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் தொடங்கியது. போட்டி நடப்பதற்கு முன்னதாக அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இருநாட்டு வீரர்களும் மைதானத்தில் முழங்காலிட்டு நின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments