கொல்கத்தாவில் கொரோனா பாதிப்புடைய 25 மண்டலங்களில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு

0 1382

கொல்கத்தாவின் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 25 மண்டலங்களில் இன்று மாலை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்போவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதனால் கொல்கத்தாவில் நேற்று மக்கள் பதற்றத்துடன் காய்கறிகள், பால், மளிகைப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வீதிகளில் பெருமளவில் திரண்டனர்.நூடுல்ஸ், பிரெட், பிஸ்கட்டுகள் முட்டை போன்றவை சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இதே போல் இல்லத்தரிசிகள் கோதுமை பருப்பு , சர்க்கரை, டீத்தூள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

கொல்கத்தா மட்டுமின்றி அதன் அருகாமையில் உள்ள ஹவுரா, வடக்கு 24 பரகனாஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் ஊரடங்கு முழு அமலுக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments