அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

0 1012

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்து வரும் கனமழையால், 12 மாவட்டங்களில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 மாவட்டங்களில் நிலைமை மேம்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி பார்பேட்டா மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாகவும், 27 ஆயிரம் ஹெக்டர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்து உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments