இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை

0 2289

மூன்று நாள் இந்திய குளோபல் வாரத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 30 நாடுகளின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தலைவர்கள், தொழிலதிபர்கள் இந்த இணையவழி மாநாட்டில் பங்கேற்கின்றனர். 75 அமர்வுகளில் சுமார் 250 பேர் உரை நிகழ்த்த உள்ளனர்.

சிதார் இசை மேதை ரவிசங்கரின் நூற்றாண்டை முன்னிட்டு அவருடைய மாணவர்கள் 3 பேர் இசையை மீட்ட உள்ளனர். தமது உரையில் சர்வதேச வர்த்தகம் முதலீடுகள் குறித்து பிரதமர் மோடி தமது கருத்துகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளின் தொழில்நிறுவனங்கள் வெளியேறும் சூழ்நிலையில் இந்தியாவில் முதலீடுகளுக்கும் உற்பத்திகளுக்குமான சாதகமான சூழல் இருப்பதை பிரதமர் மோடி எடுத்துரைக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments