சர்வதேச மாணவர்களின் விசாவை ரத்து செய்து திருப்பி அனுப்பும் உத்தரவுக்கு எதிராக வழக்கு

0 1656

சர்வதேச மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து அவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் அதிபர் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு எதிராக ஹார்வார்ட் பல்கலைக்கழகம் மற்றும் MIT எனப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகம் ஆகியன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  வகுப்புகள் முழுமையாக  ஆன்லைனில் நடத்தப்படும் நிலை ஏற்படுமானால், விசாக்கள்  ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் கடந்த 6 ஆம் தேதி ஆணை வெளியிட்டது.

இதை எதிர்த்து போஸ்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த கல்வி நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்கில், குறிப்பிட்ட உத்தரவு சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரவுக்கு தற்காலிக தடை விதிப்பதுடன், அதை  நடைமுறைப்படுத்துவதில் இருந்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, குடியேற்றத் துறை,சுங்கத் துறை உள்ளிட்டவற்றை தடுக்குமாறும் நீதிமன்றத்திடம் இந்த கல்வி நிறுவனங்கள் முறையிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments