மார்ச் 24ல் பிளஸ் 2 தேர்வை எழுதாதவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு

0 2041

தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத முடியாத சில மாணவர்களுக்கு, வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் அவர்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தேர்வுக்கான புதிய நுழைவு சீட்டுகளை மாணவர்கள் தாங்களே இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து வரும் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச் சீட்டுகளை அதே தேதிகளில் சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments