கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிக்கு நகைகளை வழங்க மறுப்பு - விவசாயி மீது தாக்குதல்

0 2722

தெலங்கானாவின் எல்லந்து என்னும் ஊரில் அடகு வைத்த நகையைத் திருப்பிக் கேட்ட மலைவாழ் இனத்தைச் சேர்ந்த விவசாயியை வங்கி அதிகாரிகள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் அமர்சிங் தாண்டாவைச் சேர்ந்த விவசாயி அசோக், எல்லந்து ஆந்திர வங்கியில் நகைக் கடனுக்கான தொகையை வட்டியுடன் முழுவதும் செலுத்தியுள்ளார். அவரிடம் ஏற்கெனவே வாங்கிய பயிர்க் கடனையும் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே நகையை வழங்க முடியும் என மேலாளர் தெரிவித்துள்ளார். பயிர்க் கடனுக்காக நகைகளைத் திருப்பித் தராமல் இருப்பது முறையில்லை என அசோக் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்காத வங்கி ஊழியர்கள் அசோக்கை வங்கியில் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள், வங்கி ஊழியர்கள், விவசாயியைத் தாக்கவிடாமல் தடுத்தனர். இது குறித்து விவசாயி புகார் அளித்ததால் வங்கி ஊழியர்கள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments