கொரோனா பாதிப்பால் குறைக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடங்கள்

0 1427

கொரோனா பாதிப்பு காரணமாக 2020-21 கல்வி ஆண்டில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடதிட்டங்களில் 30 சதவிகிதத்தை குறைத்துள்ள சிபிஎஸ்இ, 10 முதல் 12 ஆம் வகுப்புகளில் எந்தெந்த பாடங்களை நீக்கி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

10 ஆம் வகுப்பு பாடதிட்டத்தில் இருந்து ஜனநாயகம், நாட்டின் வேற்றுமைத் தன்மை, பாலினம், மதம், ஜாதி, முக்கிய மக்கள் போராட்டங்கள், இயக்கங்கள், ஜனநாயகத்திற்கு எதிரான சவால்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

11 ஆம் வகுப்பில் இருந்து கூட்டாட்சித் தத்துவம், குடியுரிமை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 12 ஆம் வகுப்பில், பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம்,இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடான உறவுகள், மாறிவரும் இந்திய பொருளாதாரம், இந்தியாவில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments