சீராய்வு மனு தாக்கல் செய்யக் குல்பூசண் மறுப்பதாகப் பாகிஸ்தான் அரசு வழக்கறிஞர் தகவல்

0 971

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூசண் ஜாதவ், சீராய்வு மனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டதாக அந்நாட்டின் கூடுதல் அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

ஈரானின் சாபாகர் துறைமுகத் திட்டத்தில் பணியாற்றி வந்த குல்பூசண் ஜாதவ், எல்லை தாண்டி உளவு பார்த்ததாகக் கூறிப் பாகிஸ்தான் காவல்துறை 2016ஆம் ஆண்டு கைது செய்தது.

2017ஆம் ஆண்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது. பன்னாட்டு நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுடன் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கூடுதல் அட்டார்னி ஜெனரல் அகமது இர்பான், தண்டனையை எதிர்த்துச் சீராய்வு மனு தாக்கல் செய்யக் குல்பூசண் ஜாதவ் மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். நிலுவையில் உள்ள கருணை மனுவைத் தொடர்ந்து வலியுறுத்துவதையே அவர் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments