திருச்சி சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: கொலைக்கும், தற்கொலைக்கும் சரிபாதி சாத்தியக்கூறுகள் - டிஐஜி ஆனி விஜயா

0 15588

திருச்சி சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலைக்கும், தற்கொலைக்கும் சரிபாதி சாத்தியக்கூறுகள் உள்ளதாக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி டிஐஜி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகே கொலையா? தற்கொலையா? என்பது குறித்து முழுமையாக தெரிய வரும் என்றும் கூறினார்.

இதனிடையே சிறுமியின் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இடத்தில் தடயங்கள் ஏதேனும் கிடைக்குமா என்பது குறித்து, சிறுமியின் உடலை பிரதேச பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் உடல் எரிந்து எந்த நிலையில் கிடந்தது எனபதை காவலர் ஒருவர் நடித்து காட்டினார். மேலும் சிறுமியின் வீட்டிலும் ஆய்வு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments