வீட்டிலேயே சென்று கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - கமல்ஹாசன்

0 1319

கொரோனா பரவும் சூழலில் வருமுன் காப்பதே சிறந்தது எனவும், வந்த பின்னர் சரி செய்வது முறையல்ல எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது பற்றி சுட்டிகாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவரின் அனுமதிக்காக காத்திருக்காமல் நேரடியாக ஆய்வகங்களை பரிசோதனைக்கு அணுகலாம் என அறிவிக்க வலியுறுத்தியுள்ள கமல், மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஆய்வக ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீட்டிலேயே சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments