தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது

0 1465
ஜூலை 15 முதல் கடலில் மீன்பிடிக்க மீன்வர்களுக்கு அனுமதி

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல், 24 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் ஆக குறைந்துள்ளது என மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் இயங்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது என்றார்.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு மடியில் கணமில்லை - எனவே, வழியில் பயமில்லை என்றார். வருகிற15 -ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments