கொரோனா பரவல் மையங்களாக உருவெடுக்கும் தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள்

0 3901
கொரோனா பாதிப்பில் தெலங்கானா ஆறாமிடத்திலும், கர்நாடகம் ஏழாமிடத்திலும் உள்ளன

தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள் நாட்டின் புதிய கொரோனா பரவல் மையங்களாக உருவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.

புதன் காலை நிலவரப்படி தெலங்கானாவில் 27 ஆயிரத்து 612 பேரும், கர்நாடகத்தில் 26 ஆயிரத்து 815 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த எண்ணிக்கையில் பார்த்தால் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக இரு மாநிலங்களும் ஆறாவது, ஏழாவது இடங்களில் உள்ளன. தெலங்கானாவில் இரு வாரங்களுக்கு முன் ஒரு நாளில் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 352 ஆக இருந்தது.

கடந்த இருவாரங்களாக நாள்தோறும் சராசரியாக ஆயிரத்து இருநூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கர்நாடகத்தில் இரு வாரங்களுக்கு முன் ஒரு நாளில் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 260 ஆக இருந்தது. கடந்த இருவாரங்களாக நாள்தோறும் சராசரியாக ஆயிரத்து நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments