11 மாத குழந்தைக்கு தூக்குமாட்டிவிட்டு தாயும் தற்கொலை, கணவரை கைது செய்து போலீசார் விசாரணை

0 3174

திருப்பத்தூர் அருகே தனது 11 மாத பச்சிளங்குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்திலி அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்த சிலம்பரசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அவரது மனைவி கவிதாவுக்கு 2 நாட்களுக்கு முன் தெரிய வந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கவிதா இன்று காலை கணவன் வேலைக்கு சென்ற பின்பு, தனது 11 மாத ஆண் குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு, கவிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கவிதா வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் கவிதா சடலமாக கிடந்துள்ளார்.

குழந்தை ரிஷித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். குழந்தைக்கு மாட்டிய தூக்கு முடிச்சு கழுத்தின் முன்பக்கம் திரும்பி கொண்டதால், கழுத்து இறுகாமல் குழந்தை உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. குழந்தைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments