தாயை இழந்த குருவிக் குஞ்சுகளை அரவணைத்து வளர்க்கும் நாய்

0 9149

இங்கிலாந்தில் நாய் ஒன்று குருவிக் குஞ்சுகளை அரவணைத்து நட்பு பாராட்டும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. நார்ஃபோல்க் என்ற இடத்தில் ஜடேன் என்பவர் 5 வயதான ரூபி என்ற லேப்ரடார் வகை நாயை வளர்த்து வருகிறார்.

அவர் வீட்டுத் தோட்டத்தில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று இறந்து விடவே, அவற்றின் குஞ்சுகள் தாயின்றி பரிதவித்து வந்தன. இதனால் இரக்கம் கொண்ட ஜடேன் அவற்றை தன் வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரின் வளர்ப்பு நாயான ரூபியும் அந்தப் பறவைகளின் மீது அதீத அன்பு கொண்டு அவைகளுடன் நட்பு பாராட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments