உத்தரப் பிரதேச கொள்ளையன் விகாஸ் துபேயின் கூட்டாளி சுட்டுக்கொலை

உத்தரபிரதேசம் மாநிலம் ஹமீர்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே யின் நெருங்கிய கூட்டாளி அமர் துபே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
கான்பூரில் ரவுடி கும்பலின் தலைவனான விகாஸ் துபே வை கைது செய்ய சென்ற போது 8 போலீசார் நள்ளிரவில் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
40 தனிப்படைகள் அமைத்து விகாஸ் துபே மற்றும் அவனது கும்பலை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனிடையே தலைமறைவாக உள்ள விகாஸ் துபே ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேற்றிரவு அங்கு விரைந்தனர்.
ஆனால் அங்கிருந்தும் விகாஸ் துபே தப்பிவிட்டான். இந்த நிலையில், ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபே அதிகாலை ஹமீர்பூர் என்ற இடத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
Comments