நாடு முழுவதும் மேலும் 22,752 பேருக்கு கொரோனா, 482 பேர் பலி

0 1276

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதோடு, மேலும் 482 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 642ஆகவும் அதிகரித்துள்ளது.

இதில் நாடு முழுவதும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 944 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 பேர் சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்திலுள்ள மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 121ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 9,250ஆகவும் உயர்ந்துள்ளது. 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்தையும், 3ம் இடத்திலுள்ள டெல்லியில் 1 லட்சத்து 2 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments