இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

0 2537

உலக அளவில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 117 நாட்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை காண ரசிகர்கள் யாருக்கும் மைதானத்திற்கு வர அனுமதி வழங்கப்படவில்லை, மாறாக வீரர்களை உற்சாகப்படுத்த செயற்கையாக ரசிகர்களின் கரகோசங்கள் எழுப்பப்படுகிறது.

தொடர்ந்து வீரர்கள் தங்களிடையே இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கைகளை குலுக்கவும், பந்தின் மீது உமிழ்நீரை பயன்படுத்தம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments