இந்தியாவில் 19 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பு

0 2839

இந்தியாவில் பாம்புக் கடியால் கடந்த 19 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் டொரன்டோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுகாதார ஆராய்ச்சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்கள் படி உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 81 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் பலியாவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் பாம்புக் கடிகள் அதிகமாக இருப்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments