கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு குழு விஞ்ஞானி ராஜினாமா.! ஆராய்ச்சிக்குழுவும் கலைப்பு

0 84457

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு குழுவில் இருந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ பெண் விஞ்ஞானி ககன்தீப் காங் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். உலகையே உலுக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் திடீரென ஏற்பட்டிருக்கும் அதிர்வலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் இரைப்பை-குடல் அறிவியியல் துறை பேராசிரியையாக இருந்தவர் ககன் தீப் காங்... தனது மருத்துவ திறமையால் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்தியரசின் சுகாதார அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று அங்கு விஞ்ஞானியாக பணியாற்றிவந்தார்.

உலகையே உலுக்கும் கொரோனாவுக்கு, இந்தியாவிலேயே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் குழுவிற்கு தலைமை பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் செயல்பட்டு வந்த இந்த குழுதான் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகின்றது. அந்த மருந்து தற்போது பல்வேறு கட்ட ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டதோடு, ஆராய்ச்சி குழுவையும் கலைப்பதாக கூறி, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஃபரிதாபாத் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் தான், ககன்தீப் காங்-ன் குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. கோவிட் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கான ஆன்டிஜென் சோதனைகளும் அங்கேயே நடைபெற்றுள்ளது.

கடந்த மே மாதம், மட்டும், இக்குழுவில், சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தசூழலில், ஐசிஎம்ஆர்-ல் உள்ள விஞ்ஞானி ஒருவரது தலைமையில், புதிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்கள் கழித்தே மற்றொரு குழு குறித்து ககன் தீப் காங்-ற்கு தெரியவந்ததாகவும், இதனால் அதிருப்தி அடைந்த நிலையில், குழுவை கலைத்துவிட்டு, ராஜினாமா செய்துவிட்டதாகவும், சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசிய ககன் தீப் காங், தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ள ககன் தீப் காங் , அடுத்த மாதம் வேலூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்ப இருப்பதாக தெரிவித்தார்.

லண்டனின் தி ராயல் சொசைட்டின் ஃபெல்லோ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர் ககன் தீப் காங் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments