சென்னையில் மேலும் 1203 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1493

சென்னையில் 4 -ஆவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரம் பேருக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

பெருநகரில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் மேலும் 334 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 253 பேருக்கும், வேலூரில் 117 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும், தூத்துக்குடியில் 144 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் 217 பேர், ராணிப்பேட்டையில் 120 பேர், கன்னியாகுமரியில் 119 பேர், காஞ்சிபுரத்தில் 106 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த ஆயிரத்து 1636 பேரில், ஆயிரத்து 120 பேர், சென்னையைச் சேர்ந்த வர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments