ரூ. 20,000 கோடி லடாக் எல்லை சாலை திட்ட பணிகள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

0 6486

லடாக் எல்லை பிரதேசத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடக்கும் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள்  குறித்து ஆய்வு நடத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவற்றை விரைந்து நிறைவேற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த  தர்பூக்-ஷ்யோக்-தவுலத் பேக் ஓல்டி சாலை உள்ளிட்டவை  மேம்படுத்தப்படுகின்றன. இந்த சாலையின் பெயரால் 2 மாதங்களுக்கு முன்னர் இந்திய-சீன தரப்பிற்கு இடையே பதற்றம் ஏற்பட்டது.

அதே போன்று கட்டுப்பாட்டு எல்லையில் இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் 30 பாலங்களை அமைக்கும் பணியும் நடக்கிறது. இவை தவிர சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைகள் ஆகியன அமைக்கும் பணியும் பல்வேறு கட்டங்களில் உள்ளது. 

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் எல்லை சாலை அமைக்கும் கழகத்தின் அதிகாரிகளுடன். இவை  குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments