கொரோனா பரவல் குறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று

0 3567

கொரோனா தொற்று பரவல் விகிதம் மிகவும் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவிலான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் பத்துலட்சம் பேரில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 505.37 ஆக உள்ளது.

இந்த விகிதம் சீனாவில் 15,459.8 ஆகவும்,பெருவில் 9070.8 ஆகவும், அமெரிக்காவில் 8660.5 ஆகவும், பிரேசிலில் 7419.1 ஆகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கொரோனா இறப்பு விகிதமும் இந்தியாவில் மிக மிக குறைவாக உள்ளது. 10 லட்சம் பேருக்கு 14.27 என்ற அளவு இந்தியாவிலும், 68.29  என்ற அளவு சர்வதேச அளவிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments