தமிழ்நாட்டில் இன்று 3616 பேருக்கு கொரோனா உறுதி

0 6277

தமிழகத்தில் ஒரே நாளில் 3616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2ஆவது நாளாக 4 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலும் 3616 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 65 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். கர்நாடகாவில் இருந்து வந்த 25 பேருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 9 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத், பக்ரைன், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 6 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 65 பேர் கொரோனா தொற்றால் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் 45 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 20 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1600ஐ தாண்டி இருக்கிறது. 96 ஆய்வகங்களிலும் ஒரே நாளில் 36 ஆயிரத்து 938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 4545 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்தை கடந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தம் 45 ஆயிரத்து 839 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments