அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை மூடப்பட்டிருக்க வேண்டும் - மத்திய அரசு

0 15459

பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பள்ளிக் கல்வி செயலாளர் அனிதா கார்வல் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து வித கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இணையவழி கற்றலை தொடரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களை வீடுகளில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும், இயன்றவரை கல்வி நிறுவனங்களுக்கு வந்து பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments