முகக்கவசம் அணியாதவர்களை தான் மதிப்பதில்லை - டாம் ஹாங்ஸ்

0 2083

பிரபல ஹாலிவுட் நடிகரான Tom Hanks, பொது இடங்களில் முகக்கவசம் அணிய மறுப்பவர்களை தான் மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

Da Vinci Code, Cast Away போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான Tom Hanks கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தார்.

இந்நிலையில், தன் அடுத்த திரைப்படமான Greyhound-ஐ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்தப் பெருந்தொற்று காலத்திலும் முகக்கவசம் அணியாதவர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள தகுதி அற்றவர்களாக தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் உட்பட ஏராளமான அமெரிக்கர்கள் முகக்கவசம் அணிவதற்கு முக்கியத்துவம் அளிக்காததால், உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments