பீகார் சட்டமன்ற தேர்தல் டிஜிட்டல் பிரச்சாரத்தில் பாஜக தீவிரம்

0 1489

கொரோனா காலகட்டத்திலும், ஏற்கனவே திட்டமிட்டபடி பீகாரில் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை டிஜிட்டல் வடிவில் தீவிரப்படுத்தி உள்ளது.

இதுவரை 70 சட்டமன்ற தொகுதிகளில் ஜன் சம்வாத் டிஜிட்டல் உரைகள் வாயிலான பிரச்சாரப்பணிகள் நடந்துள்ளன. அடுத்து வரும் வாரங்களில் எஞ்சிய தொகுதிகளிலும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள மாநில பாஜக திட்டமிட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் ஜூம் மற்றும் பேஸ்புக் நேரலை வாயிலாக கட்சித் தொண்டர்களுக்கு வழங்கும் உரைகள்,  மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்கான பணியில்  700 கட்சித் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அது போன்று கட்சித் தலைவர்கள் ஆற்றும் பிரச்சார உரைகள், சமூகவலைதளங்கள் வாயிலாக பொதுமக்களில் குறைந்தது 2000 பேருக்காவது சென்றடையவேண்டும் எனவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments