கொரோனாவை பரப்பியதாக வெள்ளிப்பட்டறை தொழிலாளி மீது புகார்

0 717

சேலத்தில் கொரோனாவை பரப்பியதாக வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஒருவர் மீது மாநகராட்சி சார்பில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்னதானப்பட்டி சீரங்கன் தெருவைச் சேர்ந்த சச்சின் என்பவர் இ-பாஸ் அனுமதியின்றி குடும்பத்துடன் மகாராஷ்டிரா சென்று வந்தது, மாநகராட்சியின் வீடு வீடாக நடத்தப்படும் கொரோனா கணக்கெடுப்பு பணியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சச்சின் உட்பட அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதனிடையே, வெளியூர் சென்று வந்ததின் அடிப்படையில் சச்சின் குடும்பத்தினர் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் அப்பகுதி மக்களிடம் சகஜமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அப்பகுதியை சேர்ந்த 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 17 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, கொரோனாவை பரப்பியதாக சச்சின் மீது மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்பட்டது, பொது சுகாதாரத்துக்கு குந்தகம் விளைவித்தல், அனுமதியின்றி வெளியூர் சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments