'என் அட்மின் தவறிழைத்து விட்டார்!' தங்கம் கடத்திய பெண்ணுடன் பினராயி விஜயன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கேரள ஆளுநர்

0 13473

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட் கள் என்ற பெயரில் வந்த பார்சல்களில் தங்கம் 30 கிலோ தங்கம் ஞாயிற்றுக்கிழமை  சிக்கியது. இந்த விவகாரத்தில், கேரள முதலமைச்சரின் தனி செயலர் எம்.சிவசங்கர்  மீது புகார் எழுந்துள்ளது. தங்க கடத்தல் விவகாரத்தில் விசாரிக்கப்படும் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணி வகித்த ஸ்வப்னா சுரேஸை, சிவசங்கர்தான்  பணியில் நியமித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால், கேரள முதல்வரின் தனி செயலர் சிவசங்கரின்  பதவி பறிக்கப்பட்டுள்ளது. இனிமேல், தகவல் தொடர்புத்துறை செயலராக மட்டுமே அவர்  இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பதவி பறிக்கப்பட்ட சிவசங்கர்  நீண்ட விடுப்பில் செல்ல விடுமுறை கேட்டு கேரள அரசிடத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த விவாகரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயரும் அடிபடுகிறது. பினராயி விஜயனோ, தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார். இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கான், ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், கேரள முதல்வருடன் தங்க கடத்தலில் விசாரணைக்குள்ளான ஸ்வப்னா சுரேஸ் இருந்தார். பின்னர், 30 நிமிடத்தில் அந்த பதிவை ஆரீஃப் முகமது கான் நீக்கி விட்டார்.image

தொடர்ந்து, வேறு ஒரு நிகழ்வில் கவர்னர் உரையாற்றுவது குறித்த பதிவு ஆஃரீப் முகமது கான் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஆனாலும், கேரள முதல்வர் தங்க கடத்தலில் தொடர்புடையவருடன் இருப்பது போன்ற புகைப்படத்தையே அவரின் ட்விட்டர் பக்கம் மீண்டும் காட்டியது. பின்னர், அந்த ட்விட்டையே கேரள ஆளுநர் நீக்கி விட்டார். புகைப்படம் வெளியிடப்பட்டது  குறித்து, ஆரீஃப் முகமது கான் விளக்கமளித்துள்ளார். அதில், தன் ட்விட்டர் பக்கத்தை ஹேண்டில் செய்பவர் தவறுதலாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுவிட்டாகவும்,  உடனடியாக அந்த பதிவு நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது, ஸ்வப்னா சுரேஷ் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்வப்னாவுக்கு உதவியாக இருந்த திருவனந்தபுரம் அமீரக துணை தூதரகத்தில் பணியாற்றியதாக சொல்லப்படும்  ஷரித் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்ததப்பட்ட ஷரித்  ரிமாண்ட் செய்யப்பட்டார்.

தங்க கடத்தல் விவாகரத்தில் கருத்து தெரிவித்துள்ள கேரள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுரேந்திரன், ''முறைகேடாக சம்பாதிப்பவர்களிடத்தில் இருந்து மார்க்ஸிஸ்ட் கட்சி ஆதாயம் பெற்றுள்ளது. அப்படி, பெற்ற பணத்தை கொண்டு நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது '' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments