அரியலூரில் ரூ. 347 கோடி மதிப்பீட்டில் அமையும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

0 312

அரியலூர் தெற்கு கிராமத்தில் 347 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் புதிதாய் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்க அனுமதி பெறப்பட்ட நிலையில், 9 கல்லூரிகளுக்கு ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. அந்த வரிசையில் அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு, தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் மதிப்பிலான பெட் சி.டி. ஸ்கேன் கருவி மற்றும் Linear Accelerator எனப்படும் நேரியல் முடிக்கி கருவிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பெரம்பலூர், காஞ்சிபுரம் மருத்துவமனைகளில் 24 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments