சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

0 2718

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.

இந்நிலையில் முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து, மத்திய புலனாய்வு துறை விசாரிக்க மத்திய அரசு தற்போது அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments