பாரத் நெட் திட்டத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 853
இணைய சேவை தனியார் கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கவே பாரத் நெட் திட்டம் - அமைச்சர்

பாரத் நெட் திட்டத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் பகுதியில் கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு, முகக்கவசம், மருந்து, மாத்திரைகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இணையதள சேவை தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இந்த பாரத் நெட் விவகாரகத்தில் நன்றாக படித்த, ஞானம் உள்ள ஆ.ராசா ஏன் இப்படி வாந்தி எடுக்கிறார் என மக்கள் கேட்பதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments