திருப்பதியில் கோவில் பாதுகாப்பு பணி போலீசார் உள்ளிட்ட 44 பேருக்கு கொரோனா என தகவல்

0 3348
பக்தர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா இல்லை எனவும் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பாதுகாப்பு பணி போலீசார் உள்பட பணியாளர்கள் 44 பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவஸ்தான அர்ச்சகர், நாதஸ்வர வித்வான்கள், விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் ஆகிய 17 பேருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 27 போலீசாருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேவஸ்தானத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஊழியர்கள் அனைவருக்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமான உணவுகளை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments