கொரோனா 3 புதிய அறிகுறிகள்

0 61638
வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி - கொரோனா புதிய அறிகுறிகள்

தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலியும் கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பருவநிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் கொரோனா வைரஸ், நுரையீரலுக்கு பதிலாக செரிமாண மண்டலத்தை தாக்குவதாகவும் கூறப்படுகிறது.

சளி, இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை கொரோனாவுக்கான பொதுவான அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன. ஆனால், கொரோனவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் தலைவலி என புதிய அறிகுறிகள் வெளிப்படுவதாக, ஹைதராபாத் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் இத்தகைய புதிய அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருப்பதாகவும், இது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உணவு ஒத்துக்கொள்ளாததாலும், காலநிலை மாற்றங்களாலும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படுகிறது என்று கருதப்படும் நிலையில், அவை கொரோனா பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆனது நுரையீரலை தாக்காமல், முதலில் செரிமாண மண்டலத்தை தாக்குவதால், தீவிர வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு, உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையில் கொண்டுபோய் விடுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உடல் பலவீனமடைந்து, ஆக்சிஜன், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறைந்து திடீரென நிலைகுலைந்து விழும் நிலை ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் ஆனது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தப்பிப் பிழைப்பதோடு, மனிதர்கள் மத்தியில்  தொடர்ந்து பரவுகிறது என மருத்துவ வட்டாரங்கள் விளக்கம் அளிக்கின்றன.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சுவாச மண்டல பாதிப்பு மூலம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இப்போது செரிமாண மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும், ஆனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, அதை கொரோனா என யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதும் மருத்துவ வட்டாரங்களை கவலை அடையச் செய்துள்ளது. எனவே, இந்த புதிய அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு அவசியம் என்றும், அதேசமயம் பீதியடைய வேண்டியதில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களில் உயிரிழப்பு, ஆனால் வழக்கமான கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதே, புதிய அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை செய்ய காரணம் என ஹைதராபாத் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், புதிய அறிகுறிகள் தோன்றுபவர்களுக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments