மும்பையில் கொரோனா தாக்கத்திற்கு நடுவே இரு மருத்துவர்கள் தாங்கள் படிக்கும் விடுதி அறையிலேயே திருமணம்

0 1387
உறவினர்கள், நண்பர்கள் என 10 பேர் மட்டும் பங்கேற்ற எளிய திருமணம்

மும்பையில் கொரோனா தாக்கத்திற்கு நடுவே இரு மருத்துவர்கள் தாங்கள் படிக்கும் விடுதி அறையிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

சீயோன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அவுரங்காபாத்தைச் சேர்ந்த சர்ஜராவ் சோனூனும் ஹரியானாவைச் சேர்ந்த ரிம்பி நஹாரியாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்வுகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்கூட்டியே அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். கொரோனா தொற்று காரணமாக தாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே நண்பர்கள், உறவினர்கள் என 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அமைதியாக நடந்தது அவர்களின் திருமணம். தேசிய மருத்துவர்கள் தினமான கடந்த 1ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments