இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்தது

0 1652

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 665ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3ம் இடத்தில் இந்தியா உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 ஆயிரத்து 252 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் 467 கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 160ஆக உயர்ந்துள்ளது.

இதில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 4 லட்சத்து 39 ஆயிரத்து 948 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் கடந்துள்ளது. 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்து 14 ஆயிரத்தையும், 3ம் இடத்திலுள்ள டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments