இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய சீனா முயற்சி..!

0 4208

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்து சீன நிறுவனங்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை, மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சமயத்தில் இந்திய நிறுவனங்களை, அண்டை நாடுகள் நாடுகள் அபகரிக்கும் முயற்சியை தடுக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

அதன்படி, அண்டை நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய, மத்திய அரசின் அனுமதி பெறுவது அவசியமாகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் 50 முதலீட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.

எனினும், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னையால், இந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. அவற்றை பரிசீலிப்பது குறித்து, கவனமுடன் ஆலோசிக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments