காவல்நிலையத்தில் மது அருந்திய 3 போலீசார் சஸ்பெண்ட்

0 1097

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் காவல் நிலையத்திலேயே மது அருந்திய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்துபுரம் இரண்டாவது நகர காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர்கள் திருமலேஷ், நூர் முகமது மற்றும் கோபால் நயாக் ஆகியோர் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கி பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் மது அருந்திய காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இதனை அடுத்து அந்த 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்ய யேசுபாபு பணியிடை நீக்கம் செய்தும், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments