அதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழு ஆலோசனை

0 1574

அதிமுக கட்சிக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பாக அக்கட்சியின் ஐவர் குழு ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் ஐவர் குழு உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலுக்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments