உலக நாடுகளுக்கு சீனா மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது-டிரம்ப் குற்றச்சாட்டு

0 4208

அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் சீனா மிகப் பெரிய சேதத்தை விளைவித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் 29 லட்சத்து 30ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.  கொரோனா சீனாவின் ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம்சாட்டியது.

கடந்த சனிக்கிழமை அவர் தனது நாட்டின் 244-வது சுதந்திர தின உரையில் கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்ததும், ஏமாற்றியதும், மூடி மறைத்ததுமே உலகம் முழுதும் 189 நாடுகளுக்கு கொரோனா பரவக் காரணமாகிவிட்டதாகவும், கொரோனா பாதிப்புக்கு முழுமையாக சீனாவே பொறுப்பு என்றும் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் ஒரு முறை அவர் சீனாவை குற்றம்சாட்டியுளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments